Movie Review – மதராச பட்டினம்…

கிழக்கிந்திய கண்பெனியாய் வந்தேறி நானூறு ஆண்டுகள் அடிமைபடுத்தி ஆண்ட வெள்ளையர்கள் பாரத தேசத்தை விட்டு வெளியேறும் பொழுதுகளின் பின்னணியில் பின்னப்பட்ட கதைக்களன். சுதந்திரத்தீயை அணைக்க முற்படும் பிரிட்டிஷாரின் பூட்ஸ்களின் அடியில் சிக்காமல் போராடும் காதலை வரிக்கிறது. வைரமுத்து வரியில் சொல்லவேண்டுமானால் ” ஒரு போர்க்களமும், இரண்டு பூக்களும்” !

உள்ளே வரும் போது “ஸ்டில்லுல ஆர்யா நிக்கரதையும், டிரசையும் பார்த்தா லகான் மாதிரி இல்ல இருக்கு? கிரிக்கெட்டுக்கு பதில் மல்லுயுத்தம் வச்சி மொக்கைய போட்டான்னுவலா? அதே மாதிரி ஒரு இங்கிலீஷ் figure வேற இருக்கே மக்கா?!” என்றும்,  படம் ஆரம்பித்த பிறகு ” வயசான ரோஸ் டைட்டானிக்க பாக்க போறது மாதிரி இவங்களும் கெளம்பிட்டாங்க, அதே மாதிரி பிளாஷ் பேக், அதே மாதிரி நெட்டையா ஒரு பிரிட்டிஷ் வில்லன், லோ கிளாஸ் ஹீரோ…சரி சரி தமிழழக டைடானிக் மச்சி..” என்றும் எண்ணங்கள் வரத்தான் செய்கின்றன.  சிறிது நேரத்திற்கு.  அப்புறம்தான் டைரக்டர் விஜயும், ஆர்ட் டைரக்டர் செல்வ குமாரும் எழுந்து நிற்கிறார்கள்.
படத்தின் ஹீரோ ஆர்ட் டைரக்டர்.  அப்பா.. அந்த கால மவுண்ட் ரோடு, சென்ட்ரல் ஸ்டேஷன், மதராச பட்டினத்தின் தேம்ஸ் நதியாய் கூவம், உடை, ரயில், கட்டிடங்கள் என எல்லாத்தையும் ஆர்ட் டைரக்டர் கண் முன்னே நிறுத்தினால், டைரக்டர் விஜய் நம்மை அங்கேயே கை பிடித்து அழைத்து செல்கிறார்.
பாலாகிட்டா போயிட்டு வந்திட்டா நடிக்கற விதமே வேற என்று  விக்ரம் ஒரு முறை சூர்யாவிற்கு சொன்னதை ஆர்யா மெய்பிக்கிறார். எமியாய் வந்து அந்தப் பெண் நெஞ்சில் நிற்கிறார்.
மணிரத்தனம் படம், லகான், டைடானிக் – இவை எல்லாம் டைரக்டர் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும் போல. ” போட்டியில் ஜெயிச்சிட்டால் இத விட்டு கொடுத்திடறோம், ‘ காலி மேகா காலி மெகா பானி..’ மாதிரியே அதே இடத்தில ஒரு பாடல், உதித்நாராயணன் குரலில் மற்றுமொரு பாடல்..” என லகான் தூவலும், ” எல்லாம் சரியாயிடும், அம்மாவே சொன்னாங்க… தாலி, எங்கம்மா தாலி… கட்டிக்க போறவனுக்கு..” போன்ற சின்னப் பெண்ணின் அச்சு அச்சரமாய் மணிரத்ன வசனங்களும் தூக்கலாய் தெரிந்தாலும், புது மாதிரி முயற்சி, நன்றாய் சொல்லப் பட்டிருக்கிறது.
சமகால நிகழ்வுகளையும், இப்படி ஒரு ப்ளாஷ் பேக்கையும் கலந்து கட்டி இடைவேளை வரை அங்கே இங்கே திரும்ப முடியாமல் பார்க்கிற மாதிரி கொடுத்திருக்கிறார்கள்.
எம். எஸ். விஸ்வநாதன் குரல் அட போட வைக்கிறது. விக்ரம் கூட பாடி இருக்காராமே!
ப்ளஸ் பாய்ண்ட்ஸ்:
1 . மிக வித்தியாசமான கதைக்களனும், அதை சொன்ன விதமும்.
2 . பழைய மதராச பட்டினத்தையும், இன்ன பிற விஷயங்களையும்  கண் முன்னே நிறுத்தும் ஆர்ட் டைரக்சன்.
3  ஆர்யா, எமி மற்றும் நடிகர் பட்டாளம்
மைனஸ் பாய்ண்ட்ஸ்:
1 வேகமாய் செல்லும் படத்தின் இடைவேளைக்கப்புறம் வரும் அந்த சில இழுவை காட்சிகள் ( தயங்காமல் படத்திலிருந்து வெட்டி விடலாம் அவற்றை)
2 கவர்னர், அவ்வளவு போலீஸ், ஆள், அம்பு, சேனை, துப்பாக்கி படைன்னு எல்லோரும் அவ்வளவு துரத்தியும் ஒன்னும் பெருசா ஆவாது அவங்களுக்கு,  துணியை அடிச்சி துவைக்கும் போது துவைக்கற கல்லு ஆடறது கூட கவனிக்காதது… போன்ற சில லாஜிக் உதைக்கும் காட்சிகள்.
மணக்குடியான் வெர்டிக்ட்:
தமிழில் புது முயற்சி, நன்றாய் கொடுக்கப்பட்டுள்ளது.
மதராச பட்டினம் – மனதை தொடும் பட்டினம்.  பாருங்கள்.
:  Movie review – பரமன் பச்சைமுத்து
: Catagory  – மணக்குடி டாக்கீஸ் | மணக்குடியான்.காம்
Share this on Orkut!

Tags: , , , ,

Comments (3)

 

  1. Mukunthan says:

    Very good movie. I liked it. Very different from the typical tamil masala movies. Such movies should be encouraged.

    Thanks Params, for the nice review about the movie.

  2. Albert Einstein says:

    Superb review thlaiva. Seeing the movie tomorrow. Thanks for such a detailed review and it is good to red such reviews with Tamil :-)

  3. Chandru says:

    semma review thala…. again film paartha feelings irnthathu… ippolaam film releaseku paarka evaloo wait pannuroomoo avaloo egar unga reviewkum vantiruku tala… i enjoyed movie and especialy ur review…

    thanx for review

Leave a Reply