T.Rajendar – சிரிப்புக்கு கியாரண்டி !!

 From – Vikatan

“குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற ‘ஒரு தலைக் காதல்’ முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் ‘ஒருதலை ராகம்’. 2010-ல் ‘ஒருதலைக் காதல்’. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாரு… இந்த விஜய டி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமாப் போராடுறேன். இது தலைக்கனம் இல்லை… தன்னம்பிக்கை இலக்கணம்!” – விஜய

டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறது அறை!

“அப்புறம், ‘ஒருதலைக் காதல்’ எப்படி வந்துட்டு இருக்கு?”

“தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும். காதல்தான் கதை. தாராவிதான் கதைக் களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ஏ டு இசட் இசை மழை. ஏழு பாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமே இளைஞர்களோட சொத்து. கேரளா, பெங்களூரு, மும்பைனு ரெண்டு வருஷமா ஹீரோயின் தேடி அலைஞ்சேன். இன்னும் யாரும் சிக்கலை!”

ahahahah

:  Thanks to – Ananda Vikatan.

:  Catagory – Jannal   | Manakkudiyan.com

Share this on Orkut!

Leave a Reply