ராவணன் – Movie Review…

பட்டையை கெளப்பும் விக்ரம்,
பச்சைக்கண் அழகியை வைத்து,
படவுலகை திருப்பிப் போட்ட இயக்குனர் எடுத்திருக்கும்
பத்துத்தலை ராவணன் படம்.
 
மகாபாரதம், போர்ச்சூழலில் தாயைத் தொலைத்த பிள்ளை, மும்பை நாயக்கர், தமிழ் நாட்டு திராவிட தலைவர்கள் – என உண்மை சம்பவங்களின் கோர்வையில் படம் தந்தவர், இப்போது ராமாயணத்தை தனது பாணியில் தொட்டிருக்கிறார்.
 
புதுமையான கதை தரேன் பேர்வழின்னு தியேட்டருக்கு வர்றவங்கள ‘ குய்யோ முறையோ’-இன்னு ஓட வைக்கற கோடம்பாக்க இயக்குனர்கள் மத்தியில், ஊரு ஒலகத்துக்கு நல்லா தெரிஞ்ச பழங்கதைய எடுத்து படம் பண்ண தில்லு வேணும். சுளுக்கு புடிச்சிகிட்ட மாதிரி ஆடற பாட்டுக்கெல்லாம் வெளி நாடு போய் படம் எடுக்கிறவங்க மத்தியில, முழுப்படத்தையும் இங்கயே கண்ணுல ஒத்திக்கற மாதிரி ஒரு லோக்கஷன்ல எடுக்க நெஞ்சில மாஞ்சா வேணும். எடுத்திருக்கார். 
 
” ஆழி சூழ் அசோகா வனத்தில கற்ப கையில புடிச்சிக்கிட்டு காப்பாத்தி வந்தவளை போய், சீதா ராமன் சந்தேகப் பட்டா.. ‘ போடா பொறம்போக்கு’ இன்னு சொல்லிட்டு ராவணன் கிட்டயே திரும்பி வந்தா எப்படி இருக்கும்? ” -  இந்த சூப்பர் ’நாட்’-ஐ வச்சிட்டு முன்னையும் பின்னையும் கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு கிளைமாக்ஸ் வைச்சி மணி ரத்னம் ஸ்டைல குடுத்தா எப்படி இருக்கும்? அதான் மேட்டரு!
 
ராமகோபாலனுக்கும், ஆர். எஸ். எஸ் க்கும் பயந்து ராமாயணம் இல்லை-இன்னு சொன்னாலும், படம் பார்க்கும் எல்லாருக்கும் தெரிகிறது எது உண்மையென்று.  போதாக்குறைக்கு அனுமார் ரோலில் வரும் கார்த்திக் தாவி தாவி குரங்காய் குதிக்கிறார். கும்பகர்ணன், விபீஷணன், ராமன், ராவணன், சீதை, சூர்பனகை, அவர் மூக்கை அமுக்கும் இடம், என எல்லாமே உண்டு.
 
விக்ரம் பின்னி பெடலெடுத்திருக்கிறார். 
 
முப்பதெட்டு வயசிலையும்  அவ்ளோ அழகாயிருக்கும் ஐஸ்வர்யா ராய் , எதிரே பார்க்காத அளவிற்கு நடித்து, சொந்த குரலில் தமிழ் பேசி ஆச்சர்யப் படுத்துகிறார்.
 
மழை, ரயில்,  வீட்டு விசேஷம் நடக்கறா மாதிரி ஒரு பாட்டு, கணவன்-மனைவி அன்னியோன்யம் வழிய வழிய ஒரு பாட்டு, ‘ யாரு…. என்னாச்சீ… எத்தனை பேரு…’ போன்ற வசனங்கள், கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போன்ற லோகஷனும் அதை படமாக்கப் பட்ட விதமும், துடுக்காய் ஒரு பெண் பாத்திரம், காதலை வித்தியாசமாய் சொல்லும் வாக்கியங்கள் – என படம் நெடுக மணிரத்தினம் படங்களில் வரும் எல்லா விஷயங்களும் இந்த படத்திலும் இருக்கின்றன.  அதையெல்லாம் மீறி மணிரத்தினம் படங்களில் ‘என்னவோ ஒன்னு, மனசை தொடுமே!’ அது மட்டும் காணோம் இந்த படத்தில். 
 
‘ ஷக்தி நீ அழகா இல்ல, உன் பின்னாடி சுத்தணும் இன்னு தோனல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு’ – போன்ற மணி படத்துக்கான வசனங்களை எழுத சுஜாதா இல்லாதது நன்றாய் தெரிகிறது. சுகாசினி முயற்சிக்கிறார்.
 
 
அந்த உடைந்த சாமி முன்னால் ராகினி அழகா வேண்டுவதை பார்த்திட்டு, வீரையா படிப்படியா என்னமோ சொல்லிட்டே விஸ்வரூபம் எடுக்கற மாதிரி போகும் போது சீன் கட்டாகி வேற சீன் போறதை பார்த்தா அமிதாப் பச்சன் எடிட்டிங் பற்றி சொல்வது உண்மை என்று தான் தோன்றுகிறது. நல்ல சீன், பாதிப்பு ஏற்படுத்தும் முன்னேயே வெட்டப்பட்டுள்ளது.
 
படத்தை ஒரு டைரெக்ஷன்-ல எடுத்து, அப்புறமா ஆர். எஸ்.எஸ், ராமகோபாலன் போன்றோர்களின் தொல்லைக்களுக்கு பயந்து, நிறைய எடிட் பண்ணி தந்ததில என்னோவோ மிஸ் ஆனா மாதிரி வந்திருப்பதை போன்ற ஒரு உணர்வு.  ‘ பத்துத் தலை, அப்புறம் ஒன்னு ஒண்ணா விழும்’ – போன்ற அமிதாப் பச்சானின் வரிகள் இதை உறுதி செய்கின்றன. 
 
பிளஸ் பாய்ண்ட்ஸ்:
1 லோக்கஷன்  – அருவி, காடு, மலை
2  சந்தோஷ் சிவன் – மணிகண்டன் ஒளிப்பதிவு
3  விக்ரம், ஐஸ்வர்யா, பிரிதிவிராஜ் – நடிப்பு.
4.  A R ரஹ்மான்
5   ரிச்னெஸ்
6  புதிதாய் சொல்லப்படும் விதம்
… இன்னும் நிறைய இருக்கு.
 
மைனஸ் பாய்ண்ட்ஸ்:
1  என்னவோ ஒன்னு மிஸ்ஸிங்
2 . பாதிப்பு ஏற்படுத்தா கிளைமாக்ஸ்
3  முக்கியமான திருப்பங்கள் ( ரயிலிருந்து ஜஸ்ட் லைக் தட் ஐஸ்வர்யா போவது,…) சாதாரணமாய் போவது
4  சில இடங்களில் கோட்டை விட்ட லாஜிக்
….
….லிஸ்ட்  போதுமே
 
” மணிரத்னத்தை  இந்த மூணு லாங்குவேஜி வேலையெல்லாம் உட்டுட்டு ஒழுங்கா தமிழ்ல மட்டும் கவனம் செலுத்தி ஒரு படம் பண்ணி பட்டைய கேளப்ப சொல்லணும் அலைபாயுதே மாதிரி, அப்புறம் வேணும் இன்ன ரீமேக் பண்ணிக்கட்டும்’ – என்று என் நண்பன் சொல்வது சரி என்றே தோனுகிறது.  அல்லது ’ எடுக்கறதா எடுங்க, அப்புறம் ராமகோபாலனை பாத்துக்கலாம்’  – இன்னு சொல்ல தோணுது.  
 
மணக்குடியான் வெர்டிக்ட்:
பிரமாண்டம், ‘ மணி’ சரி, ‘ ரத்தினம்’ எங்கே ?
ஒரு முறை பாருங்களேன் !
 
: Movie Review  – பரமன் பச்சைமுத்து 
 
: Catagory – Manakkudi Talkies   | Manakkudiyan.com
Share this on Orkut!

Tags: , , , , , , , , , , , , ,

Comments (4)

 

  1. sampath says:

    vanakkam manakkudiyan,
    super review,naan theriyatha intha padathai paarthuvanthu vitten,yaaravathu paarthuvanthirunthal intha padaithai patri pesalam endru ninaithukonduirenthen,atharkul neengale padathai patri sollivitergal,ethu oru digital ramayanam.
    nandri,
    sampath.

  2. Chandru says:

    Superb Review… tala…. kalakureenga… koudumayana film ivaloo alaga review pannirukeenga… RAVANAN oru RAMAYANAM REMIX….

    luv u lots…
    Chandru…

  3. Esakki says:

    I have not seen the movie. But it seems that we can watch it once. But the way you wrote(Verbage) the Review is really good. Keep going man!…..

    - Esakki, US …..

  4. Ganesan says:

    Pathetic movie.. you can go and watch mouna ragam again

Leave a Reply