சிங்கம் – Movie Review…
நெல்லைச்சீமை அம்மியில், போலீஸ் ‘சாமி’ வீட்டு குழவியால், ஹரி ட்ரேட் மார்க் மிளகாய், உப்பு, மல்லி வைத்து அரைத்து, தாமிரபரணி தண்ணி கலந்து தாளித்து, நன்றாய் பரிமாறப் பட்ட மசாலா. உப்பும், ஓரப்புமாய், ஏற்கனவே சாபிட்டது போலிருந்தாலும் ‘சுர்ர்ர்’ என்று இருக்கிறது. கார சாரமாய் மணக்கிறது.
’ ரஜினியை விரும்பவும் வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம். வெறுமனே பாருங்கள், உங்களுக்கு பிடிக்கும் !’ என்று தான் ஆசிரியராய் இருந்த ஒரு குமுதம் இதழில் எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னது போல, சூர்யாவை வெறுக்கவும் இல்லாமல், விரும்பவும் இல்லாமல் வெறுமனே பார்த்தால் , உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில். சூர்யாவின் இருபத்தியைந்தாவது படமாம், கிடைத்த வாய்ப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். ஜீப்பைப் பிச்சி எரிந்து கொண்டு வரும் கற்பனை கொஞ்சம் ஓவரா என்றாலும், ‘சரி விடு மச்சி !’ இன்னு பாக்கலாம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி என்று மாறியிருந்தாலும் கூட, படம் முழுக்க ‘சாமி’யின் பிம்பங்கள் வந்து போய்கொண்டே தான் இருக்கிறது. விவேக்கின் ‘ சொம்பு’ ரக வசனங்களும், இடைவேல்லைக்கு அப்புறம் வரும் வில்லன் – போலீஸ் ஹீரோ, ஊரிலிருந்து வரும் ஹீரோ வின் அப்பா காட்சிகள், அனுஷ்கா கதாபாத்திர அமைப்பு, கெட்ட வார்த்தைகளை குறிக்கும் எழுத்துக்களை கொண்ட வசனங்களின் அமைப்பு – என ‘சாமி’ பாட்டையிலேயே பயணித்திருக்கிறார் டைரக்டர்.
வெறுமனே இடுப்பை மட்டும் ஒடித்து ஆடிட்டு போகாமல், படம் முழுக்க வந்து போகிற மாதிரி ஒரு ரோல் அனுஷ்காவிற்கு.
பிரகாஷ் ராஜ் கொடுக்கப்பட்டதை நன்றாய் செய்யும் ரகம். நன்றாய் செய்திருக்கிறார்.
நெட்டில் அலைந்த சர்தார்ஜி வண்டி கடத்தும் ஜோக் படத்தில் கொண்டுவந்தது, ‘ ஸ்பீட் பிரேக்கர்’ போல வந்து நிற்கும் பாடல்கள், அடுத்தது இதுதான் இன்னு யூகிக்க முடியும் காட்சிகள் இருந்தாலும், தொய்வில்லாமல் இழுத்து டைட்டாய் கட்டப்பட்ட திரைக்கதையும், கொடுக்கப் பட்ட விதமும் மற்ற எல்லா விஷயங்களையும் சரி செய்து விடுகின்றன.
ராதா ரவி, நிழல்கள் ரவி, நாசர், ‘கில்லி’ அம்மா, ‘காக்க காக்க’ போன்ற டீமில் வருபவர்கள் என்று எல்லோரும் கொடுக்கப் பட்டதை செய்திருக்கிறார்கள்.
விவேக் பெஸ்ட் இல்லையென்றாலும், கொஞ்சம் பரவாயில்லை ரகம். டி.வி யில் பிட் பிட்டாய் போட்டே ஹிட்டாக்கி விடுவார்கள் சன் டி.வி. குழுமத்தினர்.
மைனஸ் பாயின்ட்:
தட தட என்று எக்ஸ்ப்ரெஸ்ஸாய் பயணிக்கும் படத்தில் முட்டுக்கட்டையாய் நிற்கும் பாடல்கள்.
‘ பசிக்கு பொங்கல் திருடினா சரி, ருசிக்கு பாயாசம் திருடினா சரி இல்ல’ – ரகமாய் படம் முழுக்க நம்மை பஞ்சராக்கும் ‘பஞ்ச் டயலாக்ஸ்’
பெருசா பில்ட் அப் கொடுத்து, திடீரென்று தெருவில் நிறுத்தப்பட்ட பிரகசாஹ் ராஜ் பாத்திரப் படைப்பு.
வாழ்வா சாவா என்று போகும் காட்சி அமைப்புக்கு நடு நடுவே வந்து நிற்கும் அனுஷ்கா காதல்.
பிளஸ் பாய்ன்ட்:
சூர்யா
எக்ஸ்ப்ரெஸ் ஸ்க்ரீன் ப்ளே.
கொடுக்கப் பட்ட விதம்.
யாரோ சொன்னார்கள், விஜய்க்கு பண்ண கதையாம், குறை சொல்லி மிஸ் பண்ணிட்டாராம். ஐம்பதாவது படத்தில் அவர் விட்டதை இருபத்தைந்தாவது படத்தில் சூர்யா பிடித்து விட்டார்.
மணக்குடியான் வெர்டிக்ட்:
பலஹீனமாய் தெரிந்தாலும், பலமாய் கர்ஜிக்கும் மசாலா சிங்கம்! பார்க்கலாம் !
: திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து | மணக்குடியான்.காம்
Tags: movie, Paraman Pachaimuthu, Review, singam, singam movie review, Surya, tamil movies, சிங்கம், பரமன் பச்சைமுத்து, மணக்குடியான்
Comments (4)





Nach review thalaiva. I also felt that almost scene by scene comparable with Samy. Ana viru viruupppu is holding the movie. Pattu en vandahadhunu movie speedkunu thonichu. Suriya is superbbbbbbbbbbbbb.
super review.
Hi, I’m very interested in Linux but Im a Super Newbie and I’m having trouble deciding on the right distribution for me (Havent you heard this a million times?) anyway here is my problem, I need a distribution that can switch between reading and writing in English and Japanese (Japanese Language Support) with out restarting the operating system.
vanakkam,
meendum ungal varugaikku nandri
sampath