வேட்டைக்காரன் – Movie Review
இடம் – விஜயின் ஆபீஸ்:
விஜய்: டைரக்டெர் சார், எம்.ஜி.ஆர் மாதிரி வெள்ளை குதிரைல வரணும், ரஜினி மாதிரி அப்படியே பறந்து போய் அடுத்தவன் வண்டில இறங்கி சரியா ஸ்டைலா ஒக்காரணும்.
பாபு சிவன்: பண்ணிடலாம் சார்
விஜய்: ரஜினி ’ ’ முத்து’-ல துண்ட எடுத்து அப்படி-இப்படி போடுவாரே ‘ சர்க் சர்க்’ இன்னு அத பண்ணா எப்படி இருக்கும் ?
பாபு சிவன்: ரஜினி பாட்ஷால மஞ்ச துணிய சட்ட காலரா சுத்தி வச்சிருப்பாரே, அத அப்படியே வச்சிருவோம் சார், அப்புறம் நீங்க கேட்ட மாதிரி ’ சர்க் சர்க்’-இன்னு சுத்தலாம்.
விஜய்: ஆனா அந்த மஞ்ச துணி எப்பை வரும் இங்க, அவரு ஆட்டோ ஓட்டுனாரு அந்த படத்தில!
பாபு சிவன்: சார் நீங்களும் ஆட்டோ ஓட்டரமாதிரி பண்ணிடலாம் சார்.
விஜய் : நான் காலேஜ் ஸ்டூடன்ட் ஆச்சே ?
பாபு சிவன்: ஆட்டோ ஓட்டுற காலேஜ் ஸ்டூடன்ட் சார்
விஜய்: அப்படியா, சரி. அப்பா பாட்ஷா மாதிரியே ’ இந்தரன்’ மாதிரி ஒரு கேரக்டர், லோக்கல் மார்க்கெட், மாமூல் வசூல், ‘ இந்தரன் வரான் ஓடு’ மாதிரி பில்ட் அப், அப்புறம் ஒரு சூப்பர் fight . ரஜினி கம்பத்தில கட்டி வச்சி அடிச்சி ரண களம் பண்ணுவாரே அப்படி ஒரு சீன் பண்ணிடுங்க.
பாபு சிவன்: சார்… சார் அப்படியே பாட்ஷாவை மாத்தி குடுத்திடறேன் சார். ரஜினி கைப்பம்பை புடிங்கி அடிப்பார், நீங்க கார் ஸ்டீரிங்-எ புடுங்கறீங்க. அவர் ஆட்டோ-ல ” உன் வாழ்க்கை உன் கையில்”, உங்க ஆடல ” வாழு, வாழ விடு”. அடிச்சதுக்கு அப்புறம் ” சாதாரண ஆல் அடிச்ச அடி மாதிரி தெரியல, ஆஸ்பத்திரில எல்லாம் கேடக்கறாங்க” இன்னு போலீஸ் தம்பி பேசனத இங்க வேதனாயகத்த பேச வச்சில்லாம்.
விஜய்: எனக்கு ரஜினிவோட படையப்பா கூட பிடிக்கும்.
பாபு சிவன்: வுடுங்க சார், ஸ்பீடா ஒரு பாட்ட போட்டு… அந்த பாட்டு முடியரத்துக்குள்ள வளர்ந்து பெரிய ஆளா ஆவர மாதிரி படையப்பா ஸ்டைல்-ல பண்ணிடுவோம்.
விஜய்: அப்புறம் இந்த விக்ரம்-க்கு ஒரு பிரேக் கொடுத்துதே ஒரு படம் ” தில்” – இன்னு. அது கூட நல்ல ஸ்கிரிப்ட் இல்ல?
பாபு சிவன்: சார்… பின்னிடுவோம் சார். நீங்களும் போலீஸ் ஆகற லட்சியத்தோட ஒழைக்கறீங்க சார்.
விஜய்: ஐயோ… யோவ்.. நான் ஏற்கனவே காலேஜ் ஸ்டுடென்ட், ஆட்டோ வேற ஓட்டறேன். இது எப்படியா ?
பாபு சிவன்: சின்ன மேட்டரு சார்…. நீங்க போலீஸ் ஆக ஆசைப்பட்டு சென்னை க்கு வந்து காலேஜ் படிக்கும் அப்படியே ஆட்டோ ஓட்டும் ஆடோக்காரன். முடிஞ்சிதா.. அப்படியே ’ தில்’ படாது சீனை உள்ள ஏறக்கறேன் பாருங்க. ‘ அவன் என் மூஞ்சில கை வச்சிட்டான்… அவன் யாரு அவன் யாரு’ இன்னு வெறி பிடிச்சி தேடற ஒரு வில்லன வச்சிடறேன் சார். போலீஸ் டிபார்ட்மென்ட்-ல இருந்துகிட்டு உங்கள போலீஸ் ஆக விடாம தடுக்கற ஒரு கேரக்டர வச்சிடலாம் சார். அங்க நல்லவர இருந்து கஷ்டபட்ட நாசர் மாதிரி இங்க தேவராஜ் இன்னு ஒரு செட் அப் பண்ணிடலாம் சார். ஒரு லெவல் மேல போய் ” தூள்” படதிலேருந்தும் உருவிடுவோம் சார். ஊர்லேருந்து சென்னை வர்ற பையன், அவனுக்கு தண்ணி காட்டற வில்லன், கொஞ்சம் அரசியல், அப்புறம் கொஞ்சம் கேம் ஆடி ஜெயிக்கற ஹீரோ.
விஜய்: பண்ணுங்க, ஆனா படம் கொஞ்சம் இன்டர்நேஷனல் லெவெலுக்கு இருக்கணும்.
பாபு சிவன்: சார்… ஹாரிசன் போர்ட் நடிச்ச டி வி டி பாத்தேன் சார்’ Fugitive ‘ இன்னு பேரு. அப்படியே தொரத்தரானுவோ… ஓடறாரு காட்டுல…சுடரானுவோ…அப்படியே ஒரு பெரிய நீர்வீழ்ச்சி, அங்க பாக்கறாரு, இங்க பாக்கறாரு… அப்படியே டைவு அடிப்பாரு பாருங்க அது சீனு சார். அத அப்படியே வச்சிருவோம் சார், படம் ஹாலிவுட் கணக்கா போய்டும். அப்புறம் அப்படியே ரெண்டு ஜெட்-லி சண்டை சீனு, ஒரு ஜாக்கி சான் ஹீரோயினியோட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்-ல சர்ருன்னு தொங்கி போடற சீனு இன்னு சொருவிடலாம் சார்
விஜய்: யோவ்… நான் பாத்துருக்கேன் அந்த படத்தை, அந்த ஹீரோயின் சைனீஸ், சற்று இன்னு துணில சறுக்கி இறங்குவாங்க, இங்க அனுஷ்கா யோவ் !
பாபு சிவன்: பாத்துக்கலாம் சார்
விஜய்: சரி பண்ணுங்க. இன்டர்நேஷனல் டச், பட் ரஜினி சிவாஜி ஸ்டைல்-ல இருக்கணும்.
பாபு சிவன்: சிவாஜி ஸ்டைலா ? சரி… டீ கடை, வில்லன் மீட்டிங், சாருக்கு வாழக்கா பஜ்ஜி ஒரு டீ, அப்புறம் கம்ப்யூட்டர் வச்சி எல்லாரோட டேட்டாபேசும் காட்டறது, கும்பல போய் எல்லாரையும் மிரட்டி நல்லது பண்ண வைக்கிறது, விரல் சொடுக்கினா ‘ சர்க் சர்க்’ இன்னு சவுண்ட், -இன்னு கலந்து கட்டி ரஜினி படமா குடுத்திடறேன் சார். வெங்காயத்த கைல எடுத்தா கூடா… ரஜினி மாதிரி கைய மேல தூக்கி, இன்னொரு கையாள வெங்காயத்தை அங்க வர வச்சி…. கேமராவ பாத்து வசனம் பேசலாம் சார்.
விஜய்: எண்டு கூட ரஜினி படம் மாதிரி இருக்கணும்.
பாபு சிவன்: சரி சார். அண்ணாமலை, உழைப்பாளி, மன்னன் - எண்டிங் குடுத்திடலாம் சார். போலீஸ் ஆகற வெறியில உழைக்கறீங்க, எல்லாம் ஆகி கடைசியில போலீஸ் வாய்ப்பு வருது, ஆனா நீங்க ” நான் என்னிக்குமே, பால்காரந்தான், என்னிக்குமே உழைப்பாளி தான்…” ரஜினி பேசன மாதிரி ” எல்லாருக்குள்ளேயும் போலீஸ் காரன் இருக்கான்” இன்னு சொல்லிட்டு பழைய வாழ்க்கைக்கு போய்டுவீங்க
அப்படியே … சிவாஜி ல எண்டுல வர்ற மாதிரி டைட்டில் போட்டு சைடு-ல development காட்டலாம் சார். ரஜினி கூட கவுண்ட மணி வருவாரு சார். அதனால உங்க கூட வர்ற நண்பன கவுண்டமணி ஸ்டைல் ல நடிக்க வச்சி, வாய்ஸ்-உம் கவுண்டமணி மாதிரியே குடுத்திடறேன் சார்.
விஜய்: சரி… பண்ணுங்க… படம் ஆரம்பிக்கட்டும் !
டீ பாய்: அட கொடுமையே, என்ன கெரகம்டா இது? இப்படி படம் எடுத்தா வெலங்கனா மாதிரிதான்! தியேட்டர்ல எல்லா பயலுவோலும் கொலை நடுங்க சிரிப்பானுவலே!
விஜய் ஆண்டனி: சார் பாட்டு ரெடி சார்.
விஜய்: போட்டு காமிங்க.
விஜய் ஆண்டனி: கேளுங்க சார் …… ” கொல நடுங்குது… கொல நடுங்குது… ஓடு ஓடு ..! ஓடு…ஓடு … வர்றான் பாரு வேட்டைக்காரன்!”
——–
தியேட்டரில் படம் பார்த்த மக்கள்: ” ஹோஹோஹோஹோஹஓகோ ஹாஹஹஹஹஹாஹ்”
பார்கிங் லாட் போகும் ஒருவர் மனைவியை பார்த்து: ” ஏய்… இந்த பக்கம் வா… இந்த படத்த பார்த்திட்டு நீயும் மென்ட்டலா ஆயிட்டியா?!”
மணக்குடியான்.காம் Verdict :
வேட்டைக்காரன் - கொல நடுங்குது… கொல நடுங்குது… ஓடு ஓடு ..!
: விமர்சனம் – பரமன் பச்சைமுத்து | மணக்குடியான்.காம்
: Catagory – Manakkudi Talkies | Manakkudiyan.com
Tags: Annamalai, Baadsha, movie, Movie Review, Padayappa, Paraman, Paraman Pachaimuthu, Rajini, Super Star Rajini, Tamil movie, Vettaikkaaran, Vijay
Comments (6)





Kathaiya padikkumpothey kola nadunguthu. Super composing “kola nadunguthu”.
Thalaivaa Kalakitingaa … Superb …
Seriyana review…in a new style. Super.
My comment for this movie: ‘Yenna koduma sir ithu’
vijay padam(picture) pottuirukiringe,kaile oru dalda dhabaa erunthirunthal rombe nandraga erunthirukum,kalakitinge mankkudiyan
nandri
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
அட மாயிரண்டி —— போய் முதல படம் பாருங்க டா . படம் சூப்பர் டா
veetaikaran oru mokka padam , so dont see the film