நீங்க நல்லவரா…கெட்டவரா…?

 Nallavara-Kettavara

” நீங்க நல்லவரா…கெட்டவரா ?” – என்று கேட்ட பிஞ்சுப் பேரனின் கேள்விக்கு தன் அனுபவ அறிவினாலும் அறுதியிட்டு கூறமுடியாமல் ” தெரியலையேப்பா…!” என்று பாவமாய் நிற்கும் மணிரத்னத்தின் ‘வேலு நாயக்கரைப்’ போல நிற்கிறேன் நான்.    
 
முதலில் என்னையும், என்னை சுற்றி உள்ள உலகம் பற்றியும் சொல்கிறேன்.
 
நான் சிவா, மனிதர்களை விட மரங்கள் அதிகம் வாழும் பெங்களூரில்( இன்று வரையில்) நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பூங்கா, தோட்டம் என்று எல்லா வசதிகளாலும் இழைத்துக் கட்டப்பட்ட ஒரு உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி குழந்தை குட்டிகளோடு வசிப்பவன்.  இப்போது தான் புதிதாய் குடிவந்ததில் இன்னும் அதிகம் பேரை அறிந்திருக்க வில்லை. கவிஞர் வாலி போலவே மார்புவரை வெள்ளை தாடி வைத்துக்கொண்டு பார்கிங் லாட்டில் இருக்கும் பில்லரை பிடித்து தள்ளுவது போல எக்ஸ்செர்சைஸ் செய்யும் ‘வாலி மாமா’,  எப்பப் பார்த்தாலும் தண்ணி பிரச்சினைஇன்னு சொல்லி மீட்டிங் கூட்டி பேசும் ‘ குண்டு பெர்த்தா’ மேடம்,  எப்பவந்தாலும் சல்யூட் போடும் பச்சை யூனிபார்ம் செக்யூரிட்டி, ஸ்கூல் பேக்கை தூக்க முடியாமல் நடக்கும் அந்த குட்டிப் பெண்ணோடு வயித்தை தூக்கமுடியாமல் நடக்கும் அந்த ‘ தொப்பை மாமி’,    நடை பாதை பக்கத்திலிருக்கும் பிளாட் பால்கணியிலிருந்து முகம் காட்டும் நாய் – என வெகு சிலரை மட்டுமே தெரியும்.   கும்பலாய் சேர்ந்துகொண்டு கொட்டமடிக்கும் குட்டை பாவாடை – அரைக்கால் சட்டை வாண்டுகளை அடிக்கடி பார்த்திருக்கேன். அவர்கள் புன்னகையில் கூட ஒரு விஷமம் இருப்பதை கவனித்திருக்கிறேன். 
 
பக்கத்துக்கு பிளாட் நாமம் போட்ட மாமிதான் அவர்களின் இலக்கு.  பூனை மாதிரி சத்தமின்றி நடந்து வந்து, ’ நாமம்’ மாமி வீட்டு காலிங் பெல்லை ‘ டங்க் டங்க் டங்க்  டங்க் ’ என்று கோயில் மணி மாதிரி திறக்கும் வரை காத்திராமல் தொடர்ந்து அடித்துவிட்டு  ’ நாமம் மாமி’ வரும்போது ஓடிவிடுவது அவர்களின் தினக்கடன்.  பாவம் ‘நாமம் மாமி’  முகம் சிவந்து ‘ குய்யோ முறையோ’ என்று கத்திக் கொண்டிருப்பாள். காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடிப்போய் விடும் அறுந்த வால்களை பார்த்து  அவள் சொல்லும்  ” லோகம் கெட்டுடுத்து… எல்லாம் கெட்டவா…!”  என்னுள் அப்படியே இறங்கி போய்விட்டது.  காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடிப் போய்விட்டால் ” கெட்டவா” என்று அவள் பக்கிதிலிருந்து சொல்வதாய் உணர்கிறேன்.
 
இப்போது நிகழ்ச்சிக்கு வருகிறேன்.
 
தசரா ஹாலிடேய்ஸ் என்று என் குடும்பம் கிளம்பிவிட, பல காரணங்களால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் ‘ தனியே… தன்னந்தனியே’ என்று என் குரலில் ஷங்கர் மகாதேவனை கேவலப் படுத்திக்கொண்டிருந்தேன். எதிர் ப்ளாட்டிலிருந்து ஒரே கூச்சலும் களேபரமுமாய் சத்தம். நெடு நெடுவென்று வளர்த்தியாய் ஒருவன் மணைவியோடும், குழந்தைகளோடும் தாயோடும் இருக்கிறான் என்றும், எலேக்ட்ரோனிக் சிடியில் மென்பொருள் வல்லுநராய் பணிபுரிகின்றான் என்ற மட்டும் தெரியும். பேசியதில்லை. இப்போது அவன் ப்ளாட்டிலிருந்து பெருங்கூச்சல். ‘ டமால் டுமீல்’ என்று சத்தம். எதையோ தூக்கி எறிகிறான் போல. இப்போது அவன் குரல் கோபத்தின் உச்சத்தில், வெளியிலிருக்கும் எனக்கே கேக்க முடியவில்லை. எதையோ உடைக்கிறான், தூக்கி எறிகிறான். ‘ பளார்’ என்று அறையும் சதமும்… ” அய்யய்யோ….ஆஆஆஅ” என்று பெருங்குரலெடுத்து அழும் பெண்ணின் குரலும், அதை தொடர்ந்து குழந்தைகளின் அழும் குரலும், கூடவெய் தாயின் அழகையும் கேட்கிறது.
 
மிருகமாய் மாறி நிற்கிறான், மனைவியை துவைத்து எடுக்கிறான் குழந்தைகளின் கண் முன்னே, அவர்கள் குறுக்கே வந்தால் அவர்களையும் அறைந்து இருப்பான். என்ன மனிதன். தன் தகப்பனே தன் தாயை போட்டு அடிப்பதை இந்த பிஞ்சுகளால் பார்க்க முடியுமா, எப்படி நடுங்கி போயிருப்பார்கள், அந்த குழந்தைகளையும் அந்த பெண்ணையும் நினைத்து எதுவோ என்னுள்ளே கதறியது. ’ ஐயோ… நான் என்ன செய்வது… போய் பேசவும் முடியாது, ஒரு முறை கூட பேசியது இல்லையே இவர்களோடு…ஏதாவது செய். ஏதாவது செய்டா ! ‘.  நம் குழந்தைகளுக்கு இப்படி ஒரு நிலை வரவே கூடாது..  என் கால்கள் எதிர் பிளாட்டை நோக்கி நடந்தன.  இவன் இன்னமும் பெரிய குரலில் கோபமாய் கத்துகிறான். இப்போது அந்த குழந்தைகளின் கதறல் அதிகமாய் கேட்கிறது. ” அம்மா… அப்பாபட்ட…. ஆஆஅந்க்க்க்…” தொண்டை வரண்டு கத்துகிறார்கள்.  என்னால் இவர்களிடம் போய் பஞ்சாயத்து பேச முடியாது. ‘ மூடிட்டு போறியா..’ இன்னு முகத்துக்கு நேரே கதவை அடைப்பான்.  இப்போதைக்கு ஏதேனும் செய்ய வேண்டும். இந்த குழந்தைகளை காப்பத்த வேண்டும் தற்காலிகமாய், இந்த பெண்ணை வெளியில் எடுக்க வேண்டும் இப்போதைக்கு..  சுற்றும் முற்றும் பார்த்தேன் யாருமில்லை…  முடிவுக்கு வந்தவனாய் அதை செய்தேன்…
 
“ டங்க் டங்க் டங்க்  டங்க் ’ என்று காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடி வந்து என் கணினியில் முகம் புதைந்து கொண்டேன்.   தற்காலிகமாய் எல்லாம் நின்றது. அவன் வந்து கதவு திறந்தான், யாருமில்லாதது கண்டு வெளியில் வந்து தேடினான்.  ” தப்பித்தார்கள்” என்று ஒரு சின்ன திருப்தி.  சண்டை இரவில் தொடரலாம். ஆனால் அவன் வேகம் குறைந்து போனது. கோபத்தை ஒத்திப்போடமுடியாது.  ருத்ரதாண்டவம் இல்லாமல் போகலாம்.
 
இடைவெளியில் அந்த பெண் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கண்ணை துடைத்தபடியே லிப்ட்க்குள் போவதை பார்த்தேன். காலிங் பெல்லை பார்த்தேன். நாமம் மாமியின் குரல் கேட்டது என்னுள் ” கெட்டவா கெட்டவா”.
 
கேள்வி எழுகிறது…. ” நான் நல்லவனா… கெட்டவனா…?”. உங்களுக்காவது பதில் தெரியுமா ? 
 
: உணர்வும் எழுத்தும்பரமன் பச்சைமுத்து    | மணக்குடியான்.காம்  
Share this on Orkut!

Tags: , , , , , , , , ,

Comments (11)

 

  1. Malaravan says:

    Adeyappa…
    Apartment compound kullayey kootitu poitta po.
    When I come there, I will find ” Vaali Maama”, ” Gundu Bertha”, ” Thoppai maami” and “Naamam Maami”.

    Neenga Nallavanga Paraman !

  2. Vanthiyathevan says:

    excellent…outstanding…very touching… ithuku mela ennakku vaarthai theriyala. Superb!

  3. Mubeen Irshad says:

    Remba naalakarapm tamil oru article athuvum nalla msg oda novel maathiri kooditu poi…nalla irunthuthu paraman..nalla paraman :-)

  4. திருமாறன் says:

    மனதைத் தொடும் விவரிப்புக்கள். சந்தேகமென்ன, நீங்கள் நல்லவர்தான்.

  5. R.Gopi says:

    நல்லா எழுதி இருக்கீங்க… ரொம்ப உணர்வு பூர்வமாகவும், பச்சாதாப படக்கூடிய நிலையிலும் அவர்களை விவரித்தது நன்று…

    ஒரு நல்ல வேலை செய்தீர்கள்.. இல்லை என்றால், அந்த குண்டன், அவர்களை தூக்கி போட்டு மிதித்தாலும் இருப்பான்…

    நல்ல வேளை, நீங்கள் அவனிடம் மாட்டவில்லை… நினைத்தாலே..அய்யோ…

  6. Albert Einstein says:

    Siva….you are really great. Nenga nejama Nallavar. Very touching article. Only you can do that in that situation. Hats off…

  7. அருணா ராதை says:

    ஐயோ… ஏதோ ஆனந்த விகடனில் கதை படிப்பது போல ஒரு உணர்வாய் இருக்கு.
    ஆனால், இது கதையல்ல நிஜம்!
    - அருணா ராதை, கரூர். தமிழ் நாடு.

  8. Satheesh Kumar says:

    Superb Paraman! Same Paraman touch…..

    with regards
    Satheesh Kumar

  9. G.Narasimhan says:

    Miga Miga Arumai! Nalla sonneenga NALLAVARE!

  10. sireesha says:

    Very good presence of mind, offcourse you should be a good guy.

  11. kumar.D says:

    நீங்க நல்லவரா…கெட்டவரா என்ற தலைப்பு மனதைத் தொட்டு விட்டது.ஒரு உணர்வாய் இருக்கு. kumar.chennai

Leave a Reply